உள்ளம் துள்ளுதே என் உள்ளம் மகிழுதே
இயேசு ராஜா பிறந்து விட்டாரே - நமக்காய்
இயேசு ராஜா பிறந்து விட்டாரே - 2
பிறந்து விட்டாரே இயேசு
பிறந்து விட்டாரே - 2
1. அவர் வானம் பூமி யாவையுமே
படைத்தவராம் அவர்
வல்லவரும் நல்லவரும்
கிருபை உள்ளவராம் - 2
2. அவர் உலகத்திற்கே ஒளியாக
இருப்பவராம் உலகில்
நமக்காக பலியாக
பிறந்தவராம் - 2
3. அவர் எப்பொழுதும்
பரலோகத்தில் இருப்பவராம்
அங்கு நம்மையும் வாழ வைத்திடவே
பிறந்தவராம் - 2
4. அவர் உனக்காக எனக்காக
பிறந்தவராம், பாவ இருள்
நீக்கி நம்மை வாழ
வைப்பவராம் - 2