துதிப் பாடல்கள்

உலகத்தில் சிறந்தவர் இயேசு

Ulagathil Sirandhavar Yesu

உலகத்தில் சிறந்தவர் இயேசு

உயிருக்கு உயிரான இயேசு

நீர் என்னை மறவாத நேசர்

உம்மை ஆராதித்து தொழுதிடுவேன் ஐயா

எந்தன் ஜீவன் நீரே அடைக்கலம் நீரே

என்னை தினம் காக்கும் காவலரே நீரே

என் கோட்டை நீரே என் தஞ்சம் உம்மோடு

தினமும் வாழ்ந்திடுவேன்

இன்ப நிலைமாறி துன்பமே வந்தாலும்

உந்தன் அன்பு என்னை விட்டுப் பிரியாது

நீரே என் ராஜா நீரே என் நேசர்

உம்மோடு தினமும் மகிழ்ந்திடுவேன்

என்னை தினம் நடத்தி போஷித்து காக்கும்

எந்தன் அன்பு தெய்வம் நீர்தானே

நீரே என் இரட்சகர் நீரே என் மீட்பர்

உம்மோடு தினமும் வளர்ந்திடுவேன்

ஜீவ அப்பம் நீரே ஜீவ ரத்தம் நீரே

ஜீவன் தரும் விருந்தும் நீர்தானே

நீரே என் தந்தை நீரே என் ஜீவன்

உம்மோடு தினமும் வாழ்ந்திருப்பேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு