உலகத்தில் இருப்பவனைக் காட்டிலும்
எங்களுக்கு இருக்கும் நீர் பெரியவர்
பெரியவர் பெரியவர் பெரியவர்
பெரிய பெரிய காரியங்களை செய்பவர் (உலகத்தில்)
1. மாராவின் தண்ணீரை மதுரமாக மாற்றினீர்
மனம் கசந்த யோனா குரல் கேட்டீர்
ஆடுகளின் பின் சென்றவனை அழைத்திட்டீர்
அரசனாக மாற்றி மனம் மகிழ்ந்திட்டீர் (உலகத்தில்)
2. அடைக்கப்பட்ட எரிகோ கேட்டை தகர்த்தவர்
அண்டி வந்த தேவ மக்களைகாத்தவர்
இருளிலும் பசுவிலும் துன்பம் வராமல்
இறை ஒளியாய் எழுந்து நின்றவர் (உலகத்தில்)
3. மரணத்தை ஜெயமாக மாற்றினார்
மன்னனாக ஊழியங்களை செய்திட்டார்
பசித்தவனுக்கு ஆகாரம் கொடுத்திட்டார்
பரிசுத்த ஆவியாக உலகத்தில் வந்திட்டார்