துதிப் பாடல்கள்

உலகத்தை வென்று இயேசு

Ulagathai Vendru Yesu

உலகத்தை வென்று இயேசு உயிர்த்தார் ஆர்ப்பரி

காலத்தை வென்று வெற்றி சிறந்தார் ஆர்ப்பரி

அலகினை வென்று அகிலம் சிறந்தார் ஆர்ப்பரி

இயேசுவே தேவன் என்று முழங்கி

ஆர்ப்பரி ஆர்ப்பரி ஆர்ப்பரி

யேகோவா நிசி அல்லேலூயா

யேகோவா சபயோத் ஓசன்னனா

யேகோவா நிசி அல்லேலூயா

யெகோவா சபயோத் ஓசன்னனா

யேகோவா நிசி அல்லேலூயா

யேகோவா சபயோத் ஓசன்னனா

அல்லேலூயா ஓசன்னனா

அல்லேலூயா ஓசன்னனா

வழி என்று சொன்னவர் வழியாக

வந்தவர் இயேசு ஒருவரே

அற்புதமாக அவனியில் வந்தவர்

இயேசு ஒருவரே -2

பாவமே இல்லா பரிசுத்தரானவர்

இயேசு ஒருவரே

அதிசய அற்புத நன்மைகள் செய்தவர்

இயேசு ஒருவரே - 2

தனி புகழ் பெற்றவர் தனித்தன்மை

வாய்ந்தவர் இயேசு ஒருவரே

அழிந்திடா உன்னத வார்த்தைகள்

சொன்னவர் இயேசு ஒருவரே - 2

நீடித்த பெயரும் நிலையாகப் பெற்றவர்

இயேசு ஒருவரே

ஆத்மீக தாகம் தீர்த்திட வல்லவர்

இயேசு ஒருவரே - 2

வசனங்கள் நிறைவேற சரித்திரம்

படைத்தவர் இயேசு ஒருவரே

மரணத்தை வென்று ஜெயமாக நின்றவர்

இயேசு ஒருவரே - 2

சீக்கிரம் மீண்டும் வருவேன் என்றவர்

இயேசு ஒருவரே

இதயங்கள் மாற்றி புதுவாழ்வு தருபவர்

இயேசு ஒருவரே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு