துதிப் பாடல்கள்

உலக மேடை மீது

Ulaga Medai Meedhu

உலக மேடை மீது சங்கீதக்காரன் நான்

எனை பாட வைத்தவர் கர்த்தர் ஏசுவே

இனிய பாதை காட்டும் இதய போதகன் நான்

எனை பேச வைப்பவர் ஆண்டவர் ஏசுவே

அவரின் வாக்குத் தத்தம் எனது பாதை நித்தம்

இங்கு வந்தவர்கள் மொத்தம் எனது உறவு சொந்தம்

நம்ம வாழ்வே ஓர் அழகு வாழ்க்கை தான்

நாளும் ஜெபித்தால் இனி எல்லாம் ஓகே தான்

நேற்றும் இன்றும் நீயும் நானும்

பூமி மீது ஆடும் ஆட்டம் ஆட வைத்தார்

பாட வைத்தார் தேட வைத்தார் தேவன் சித்தம்

உனக்கு நானும் எனக்கு நீயும்

நேசம் கொண்டு ஜெபித்து கொள்வோம்

உலக சபைகள் ஒன்று சேர்ந்தேர்

வேத வழியில் பயணம் செல்வோம்

நதியின் பாட்டு அலைகள் சொல்லும்

நிலவின் பாட்டு அமைதி கொள்ளும்

பூவின் பாட்டு வாசம் அள்ளும்

குழந்தைப் பாட்டு மனதைக் கிள்ளும்

தாயின் பாட்டு துங்குச் செய்யும்

தேவன் பாட்டு விழிக்கச் செய்யும்

நூறு பாட்டு கேட்ட போதும்

வேதப் பாட்டை பாதை காட்டும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு