துதிப் பாடல்கள்

துன்பத்தின் நடுவில்

Thunbathin Naduvil

துன்பத்தின் நடுவில் நடந்தாலும்

தண்ணீர்கள் திரளாய் பெருகினாலும்

அக்கினி ஜீவாலை பற்றினாலும்

உன்னைக் காப்பவர் இயேசு அல்லோ

ஆம் எந்தன் இயேசு நல்லவரே

என்றென்றும் மாறாதவர்

கடைசி மட்டும் காப்பவரே

உன்னுடன் இருக்கின்றார்

பயமும் திகிலும் சூழ்கையில்

என்ன செய்வேன் என்று தியங்குகையில்

மீட்பரின் வாக்கு போதுமே

தம் கரத்தால் என்னை தாங்கிடுவார்

இயேசுவின் பின்னே செல்வேனே

வேதத்தின் வழியில் நடப்பேனே

அவரின் பிரசன்னம் வெளிச்சமே

ஆசிர்வாதம் சமாதானமே

ராஜாதிராஜன் இயேசுவுடன்

என்றென்றும் அரசாளுவேன்

அவரின் இரண்டாம் வருகைக்காய்

ஆவலுடன் நான் காத்திருப்பேனே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு