துதியின் மத்தியில் வாசம் செய்யும்
தூயவரே ஸ்தோத்ரமையா - 2
நீதியின் தேவனே ஸ்தோத்திரமையா
நிரந்திரமானீர் ஸ்தோத்திரம் - 2
இரண்டு மூன்று பேர்கள் துதித்தால்
நடுவே வாசம் செய்வேன் என்றீரே
உலகின் அனைத்தையுமே படைத்த
உம்மை துதிக்க வந்திருக்கிறோம் - 2
பயப்படாதே மீட்டுக்கொண்டேன் உன்னை
பெயர் சொல்லி அழைத்தேன் என்றீர் - 2
இருக்கிறவண்ணமாய் இருப்பேன்
என்று வாக்கு கொடுத்தவரே - 2