துதிப் பாடல்கள்

துதித்திடு மனமே

Thudhithidu Manamae

துதித்திடு மனமே இயேசு கிறிஸ்துவையே

அல்லேலூயா ஆர்ப்பரித்து

மகிழ்ந்து பாடு மனமே

துன்பத்திலும் துதி என் மனமே

துயரத்திலும் துதி என் மனமே

மகிழ்ச்சியிலும் துதி என் மனமே

மன்னன் இயேசுவை துதி என் மனமே

துதித்திடு மனமே

கண்ணீரிலும் துதி மனமே

கவலையிலும் துதி என் மனமே

காலமெல்லாம் துதி என் மனமே

கர்த்தர் இயேசுவை துதி என் மனமே

துதித்திடு மனமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு