துதிகளின் மத்தியிலே வசிப்பவரே
துதி செலுத்தி உம்மையே ஆராதிப்பேன்
ஆராதனை உமக்கு ஆராதனை – 2
அதிகாலை வேளையிலே
ஆயத்தமாகிடுவேன் - 2
அன்பு நேசரே ஆறுதல் செய்வீர் - 2
ஆறுதல் செய்திடுவீர் - துதிகளின் மத்தியிலே
1. மத்தியான நேரத்திலே மகிமையின் தேவனையா – 2
மாறாத என் நேசர் மகத்துவமானவர் - 2
மகத்துவமானவரே – துதிகளின் மத்தியிலே
2. சாயங்கால நேரத்திலே சாய்ந்திடும் மடி நீரே – 2
சகாயம் செய்வீர் சமாதானம் தந்திடுவீர்
சமாதானம் தந்திடுவீர் - துதிகளின் மத்தியிலே
3. இரவின் நேரத்திலே இராஜரீகம் பண்ணுகிறீர்
இருளை ஒளியாக்கி இன்பம் தருகிறீர்
இன்பம் தருகின்றீர் - துதிகளின் மத்தியிலே