துதிப் பாடல்கள்

துதி பாடி மகிழ்ந்திடுவோம்

Thudhi Paadi Magizhndhiduvom

துதி பாடி மகிழ்ந்திடுவோம் தூயவரின் நாமத்தை

செவி மடித்து கேட்டிடுவோம் தெய்வத்தின் வார்த்தைகளை

கரம் தட்டி பாடிடுவோம் கர்த்தரின் கிருபைகளை

கருத்துடனே துதித்திடுவோம் கருணை தெய்வம் இயேசுவை... - 2

வாலிபமும் இளவயதும் மாயை அது மாயையே

மாவல்ல தேவன் அன்பு என்றும் அது உண்மையே... - 2

திரளான செல்வத்தில் களிகூர்ந்து வாழ்வது போல

கர்த்தரின் வேதத்தில் தினமும் நாம் மகிழ்ந்திடுவோம்...- 2

இரட்சிப்பின் பாத்திரத்தை தினமும் நாம் எடுத்துக்கொண்டு

இரட்சண்யக் கன்மலையை எந்நாளும் தொழுதிடுவோம்... - 2

காரிருளில் வாழ்பவர்க்கும் கர்த்தரின் அன்பைச் சொல்லி

பேரொளியாம் இயேசுவிடம் எந்நாளும் சேர்த்திடுவோம்...- 2

ஆபிரகாம் ஈசாக்கும் யாக்கோபின் தேவன் அவர்

தெரிந்து கொண்ட எங்களுக்கும் என்றுமே தெய்வம் அவர்... - 2

தாவீதைப் போல் பாடி தானியேல் போல் துதித்து

தரணி எங்கும் அவர் புகழை தாகத்துடன் சொல்லிடுவோம்...-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு