துதிப் பாடல்கள்

தூரமாய் பிரிந்து

Thooramaay Pirindhu

தூரமாய் பிரிந்து போனேன்

துன்மார்க்கமாய் அலைந்து வந்தேன்

ஆஸ்த்தியெல்லாம் அழிந்த பின்பு

உம்மை நான் நினைத்துப் பார்த்தேன் -2

சேர்த்துக்கொள்ளும் சேர்த்துக் கொள்ளும்

உன் பணியில் என்னை சேர்த்துக்கொள்ளும் -2

1. உளையான சேற்றினிலே உழன்று போய் வாழ்ந்த என்னை

உம்மோடு சேர்த்துக்கொண்டு உம்அருகில் வைத்துக்கொன்டீர்-2

சேர்த்துக்கொண்டீர் சேர்த்துக்கொண்டீர்

உன் மகனாய் என்னை சேர்த்துக் கொண்டீர் -2

2. உலகமே எதிர்த்தாலும் உம் அன்பில் நிலைத்திருந்து

உன் சேவை செய்திடுவேன் உண்மையாய் வாழ்ந்திடுவேன் -2

வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன்

உனக்காக நானும் வாழ்ந்திடுவேன் -2

3. பரலோக வாழ்க்கைக்கு பலரை நான் சேர்திடவே

பரிசுத்த ஆவியை பரனே நீர் ஊற்றிவிட்டீர் -2

ஊற்றிவிட்டீர் ஊற்றிவிட்டீர்

உம் ஆவியை என்னில் ஊற்றிவிட்டீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு