திரும்ப தருவேன் என்றீரே (4)
1. வெட்டுக்கிளி பச்சைக்கிளி முசுக்கொட்டை தின்று போட்ட
வருஷத்தின் பலனை - திரும்ப தருவேன் என்றீரே
திரும்ப தருவேன் என்றீரே (2) - திரும்ப
2. இயேசுவை ஏற்றுக் கொண்ட நாளில் களிகூர்ந்த
இரட்சிப்பின் சந்தோஷத்தை - திரும்ப தாருமே (2) - திரும்ப
3. ஆவியின் அனல் கொண்டு உமக்குள் பெலப்பட்ட
அபிஷேகத்தை - திரும்ப தாருமே (2)- திரும்ப
4. முழங்கால் முடக்கி உம் முகத்தை தரிசித்து ஜெபித்த
ஜெபத்தின் அனுபவத்தை - திரும்ப தாருமே (2)
5. ஆவியின் வரங்களை செயல்படுத்தும் உன்னத மகத்துவ
வல்லமையை - திரும்ப தாருமே (2)
6. இழந்திட்ட கிருபைகள் பூரண நன்மைகள்
ஆசீர்வாதங்கள் - திரும்ப தாருமே (2)
திரும்ப தந்தீரே (4)