திருச்சபை மக்களே - தூய
திருச்சபை மக்களே
அன்பின் ஆண்டவர் - இயேசு
அழைக்கிறார் வாருங்கள்
உலகத்தின் ஒளி நீங்கள் - என்றும்
உணர்ந்தே வாழுங்கள்
இருளின் அடிமைத் தனத்தை
விட்டு மறுரூபமாகுவோம்
எழுந்து ஒளி வீச
இப்போ நேரம் வந்ததே
விழித்தெழுவோம் செயல்படுவோம்
வாழ்வில் கிறிஸ்துவை காண்பிப்போம்
காலமோ நெருங்குதே - தேவ
ராஜ்யம் சமீபமே
வருவேன் என்றவர் - வெகு
விரைவில் வருகின்றார் ...
வானம் பூமி அழிந்தாலும் - வல்ல
தேவ வார்த்தைகள்
ஒருக்காலும் அழியாமல்
நிறைவேறும் நாட்களே ...
கடைசி நாட்களில் - தன்
ஆவியை பொழிகின்றார்
ஆவியால் பெலனடைந்து
திருச்சபையை கட்டுவோம் ...
தேவனை அறியா தேசம்
வழித் தெரியா தவிக்குதே
இயேசுவே வழி என்று
நற்செய்தி முழங்கட்டும்