திறந்து விட்டோம் எங்கள் உள்ளம்
திறந்து விட்டோம் எங்கள் இல்லம்
உள்ளே வாரும் என் அருமை இயேசுவே
நிரந்தரமாய் வாசம் செய்யும் தெய்வமே... - 2
கிறிஸ்துவுக்குள் ஒருவன் இருந்தால்
அவன் புதிய சிருஷ்டியாக மாறுவான்... - 2
பழையன ஒழிந்தன புதியன வந்தன
எல்லாம் புதிய சிருஷ்டியாக மாறின... - 2
ஞானிகளை வெட்கப்படுத்த - தேவன்
பயித்தியங்களை தெரிந்து கொண்டாரே... - 2
பெலவானை விட்டு விட்டு பலவீனைத் தெரிந்தெடுத்தார்
எல்லாமே உமது கிருபை தானையா... - 2
தீமையை வெறுத்துத்தள்ளியே
நன்மை செய்பவர் இயேசு ஒருவரே... - 2
மேட்டிமை அழிந்திட அசுத்தங்கள் நீங்கிட
தாழ்ந்தோரை நினைத்துடுமே தயவுடன்... - 2