தேற்றரவாளன் இயேசுவே என்னைத் தேடி
வந்த அன்பு தெய்வமே... - 2
தாயைப்போல தேற்றுகிறீர், தந்தைப்போல்
தோளில் சுமக்கின்றீர்... - 2
வனாந்தரமான வாழ்க்கையிலே
வழியின்றித் தவிக்கும் நேரத்திலே... - 2
பகைவர்கள் சூழ்ந்திடும் நேரத்திலே,
கடலினில் தரை வழி தந்தவர் நீர்... - 2
நன்றி ஐயா, உமக்கு நன்றி ஐயா... - 2
இருண்ட வாழ்க்கைப் பாதையிலே,
இன்னல்கள் சூழ்ந்த நேரத்திலே... - 2
இரவிலும் பகலிலும் நீர் எனக்கு,
அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்... - 2
நன்றி ஐயா, உமக்கு நன்றி ஐயா... - 2
மனுஷரின் வார்த்தைகள் மாராவாகி,
மனதினில் துயரங்கள் சூழ்கையிலே... - 2
மாராவின் கசப்பை மதுரமாக்கி,
மகிமையின் வார்த்தையால் மகிழ்ச்சி தந்தீர்... -2