துதிப் பாடல்கள்

தந்தையே மறப்பேனோ

Thandhaiyae Marappeno

தந்தையே மறப்பேனோ நான்

என்ன நேர்ந்தாலும் - தந்தையே மறப்பேனோ நான்

பசி பட்டினி தாகம் என்னை நெருக்கிட்டாலும் -2

உம் அன்பை மறப்பேனோ உலகம் உள்ளளவும் நான்

பெற்றோர் உற்றோர்கள் மற்ற பெந்துக்கள் கைவிட்டாலும் -2

உலகம் எதிர்த்து என்னை இகழ்ச்சியாய்ப் பேசிட்டாலும்

மனுஷர் எல்லாராலும் நான் கைவிடப்பட்டாலும் -2

உலகினில் ஏகனாய் நான் அலைந்து திரிந்திட்டாலும்

நின்திரு நாமத்திற்காய் சித்திர வதை வந்தாலும் -2

இரத்த சாட்சியின் மரணந்தான் வந்திட்டாலும்

நின்திரு நாமத்திற்காய் நிந்தைகள் வந்திட்டாலும் -2

அவனியில் அவமானம் ஏராளம் வந்திட்டாலும்

ஜெயில்தனில் அடைபட்டு சிறைவாசம் செய்திட்டாலும் -2

அங்கேயே அடிபட்டு மாண்டு மடிந்திட்டாலும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு