தாயைப்போலத் தேற்றினீரே நன்றி ஐயா
தகப்பன்போலத் சுமந்தவரே நன்றி ஐயா
என் ஜீவனுள்ள நாளெல்லாம் மறவேன் உம்மை (2)
இயேசய்யா இயேசய்யா
உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
உள்ளம் உடைந்து அழுதபோதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே - என்
அன்பான தேவன் நீரே - என்
வியாதியிலே படுக்கும் போதெல்லாம்
என்னைத் தூக்கி எடுத்துக் குணமாக்கினீர்
என் பரிகாரியானவரே - என்
துன்ப துயர நேரத்தில் எல்லாம்
என்னை ஆற்றித் தேற்றி அரவணைத்தீரே
என்னைத் தேற்றிடும் தெய்வம் நீரே (2)