சுவிசேஷமா உலக சுகபோகமா – 2
இரண்டில் எதுவேண்டும் சொல் மனமே – 2
ஊரோடு மிக
உயர்ந்த மாளிகையுண்டு
உனக்காரோடும் உல்லாச
வாழ்க்கையுண்டு – 2
கூடுவிட்டு உன் ஆவி சென்றால்
எங்கே செல்வாய் சொல் மனமே
உன் கூட வர இவை ஏது உண்டு
வருவதில்லையே மனமே
பொன்னோடும் புகழோடும்
பொருளோடும்
இந்தப் பூமியின் மீது
மகிழ்வுடன் வாழ்ந்தாலும் – 2
பாவத்தின் மீட்பின்றி
மரிப்பாயானால்
எங்கே செல்வாய் சொல் மனமே
நித்திய நரகத்தில் செல்வாயானால்
மீண்டும் வருவதில்லை மனமே
உன் பாவ வினைதீர என் இயேசுவே
அன்றி தன் ஜிவனைத்தந்து மரித்தார் அன்றோ
இதயத்தில் விசுவாசம் செவ்வாய் என்றால்
இந்த ஜனமே நீ பரலோக பங்காளி தான்