துதிப் பாடல்கள்

ஸ்தோத்திரிப்பேன் தூயவரே

Sthothirippen Thooyavarae

ஸ்தோத்திரிப்பேன் தூயவரே

உமது அன்பு நித்தம் நினைத்து

அன்னியனாக அலைந்த என்னை

அன்பினாலே சந்தித்தீரே 2 - ஸ்தோ

1. பார்தலத்தில் பரிதபித்த பாவி என்னை தேடி வந்தீர் -2

பாவபாரம் நீக்கி என்னை இரட்சித்தீர் கிருபையால் -2

2. உமது திரு இரத்தத்தால் பாவம் அற எனை கழுவி -2

பாதகனாய திரிந்த என்னை செந்தமாக்கி தீர்த்ததினால் -2

3. புத்திர சுவீகாரம் ஆவியினால் அபிஷேகித்து -2

புத்திரனாக ஆக்கித் தீர்த்தீர் பிதாவே என்று !அழைத்திடவே -2

4. சோதனைகள் சூழும்போது துணைவரைத் தவமிருந்து -2

ஆபத்துகள் அணுகிடாமல் அல்பகலாய்ப் பாதுகாத்தீர் -2

5. துன்பத்தில் தாக்கப்பட்டு சோர்வடைந்து தயங்கும் வேலை -2

சகாயராஜ் வெளிப்பட்டு பலப்படுத்தி பாதுகாத்தார் -2

6. உலகத்தில் நான் ஜெயித்து திடன் கொள்ளுங்கள் என்றுரைத்தீரே -2

உலகத்தை ஜெயித்திடவே உமது திரு வல்லமையால் -2

7. உத்தமனாய் முடிவுவரை நிலைநிற்க அருள்புரிவார் -2

உமது திரு அடிச்சுவடை தொடர்ந்திடவே அருள் புரிவீர் -2

8. விசுவாசமாய் இருந்திடவே சொல்லி போன என் பிதாவே -2

விசுவாசத்தில் நிலைத்திருக்க அருள்புரிவார் முடிவுவரை -2

9. அல்பகலாய் தியானிக்க உமது திரு வார்த்தைகளை -2

வரைந்து தந்தீர் வார்த்தைகளை வாக்குமாறா வள்ளலே நீர் -2

10. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! திரு நாமத்திற்கே ! -2

அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆமென்! ஆமென்! -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு