துதிப் பாடல்கள்

ஸ்தோத்திரம் இயேசுவே

Sthothiram Yesuvae

ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்

உமக்கென்றும் ஸ்தோத்திரம்

என் அன்பின் தேவனே -2

1. சர்வத்தையும் படைத்தவரே

சர்வத்துக்கும் மேலான தேவனே -2

ஸ்தோத்திரிப்பேன் உம்மையே - என்றும்

ஸ்தோத்திரிப்பேன் உம்மையே - 2

2. என் கேடகமும் மகா பெரிய

பெலனுமாய் இருக்கிறாரே -2

உம்மை ஸ்தோத்திரிப்பேன் - என்றும்

உம்மை ஸ்தோத்திரிப்பேன் -2

3. தேவனே நீர் என் அடைக்கலம்

உம் நித்திய புயங்கள் என் ஆதாரம் -2

நான் போகும் இடமெல்லாம் - என்னோடு

இருக்கிற என் தேவனே -2

4. என் இரட்சிப்பின் தேவனே உம்மை

எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன் -2

உம் இரட்சிப்பு உன்னத - கிரியைகள்

உலகம் காணச் செய்வார் -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு