துதிப் பாடல்கள்

சிறகுகளாலே மூடிடுவார்

Siragugalaalae Moodiduvaar

சிறகுகளாலே மூடிடுவார்

அரணான பட்டணம் போல காத்திடுவார்

கழுகை போல எழும்ப செய்வார்

உன்னை நடத்திடுவார்

அவர் உன்னை நடத்திடுவார் - 2

எல்ஷடாய் எல்ஷடாய்

சர்வ வல்லமை உள்ளவரே - 2

உன்னை நடத்திடுவார்

அவர் உன்னை நடத்திடுவார் - 2

பாதை அறியாத நேரமெல்லாம்

அதிசயமாய் உன்னை நடத்தி வந்தார் - 2

கரங்களை பிடித்து கைவிடாமல்

உன்னை நடத்திடுவார் - 2

- எல்ஷடாய்

வாக்கு பண்ணப்பட்ட தேசத்திலெ உன்னை

கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கிடுவார் - 2

சத்துருக்கு முன்பாக உன்னை நிறுத்தி

தலையை உயர்த்திடுவார் - 2

- எல்ஷடாய்

பாதம் கல்லில் இடறாமல்

தூதர்களை அனுப்பிடுவார் - 2

உன்னை காக்க கூட இருந்து

உன்னை நடத்திடுவார் - 2

- எல்ஷடாய்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு