துதிப் பாடல்கள்

சின்ன இதயம்

Sinna Idhayam

சின்ன இதயம் திறந்துள்ளேன்

என்னோடு பேச வா

உன்மொழி கேட்க வந்தேன்

என்னோடு பேச வா

என் உள்ளத்தில் சுமை உண்டு

விழி நீர் சோகமுண்டு

உன்மொழியில் சுவை உண்டு

இனிய வாழ்வுண்டு

இறைவனே நீயே எந்தன் நம்பிக்கை

என் வாழ்விலே என்றும் நீயே துணை

என் உள்ளத்தில் கறை உண்டு

குறைகள் பல உண்டு

உன்மொழியில் நிறை உண்டு

இதய சுகமுண்டு

இறைவனே நீயே எந்தன் நம்பிக்கை

என் வாழ்விலே என்றும் நீயே துணை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு