துதிப் பாடல்கள்

சிலுவையில் இயேசு தொங்குகிறார்

Siluvaiyil Yesu Thongugiraar

Tamil Christian song lyrics: சிலுவையில் இயேசு தொங்குகிறார் (Siluvaiyil Yesu Thongugiraar). பாடல் வரிகள். More songs: ச

சிலுவையில் இயேசு தொங்குகிறார்

பாவத்தில் மூழ்கின மனிதனை மீட்க... - 2

பாவங்கள் போக்க இரத்தமும் சிந்தினார்

சாபங்கள் நீக்க முள்முடி ஏற்றார்... - 2

கைகளில் கால்களில் ஆணிகள் ஏற்றார்...-2

கஸ்டங்கள் உனக்காய் எனக்காக ஏற்றார்

கசை அடிபட்டார் நாம் கறைதிறை நீக்க... - 2

கசப்பான காடியை குடித்தார் நமக்காய்

கடைசி சொட்டு இரத்தம் தண்ணீரும் கொடுத்தார்... - 2

கர்த்தாதி கர்த்தர் சிலுவையில் மரித்தார்...-2

பாவத்தில் வாழும் மனிதனே வருவாய்

இயேசுவின் சிலுவை நிழழதில் இன்றே... - 2

வறண்ட உன் வாழ்வு வளம் இன்றே பெருக

வறண்டது இயேசுவின் இனிய நல்நாவு... - 2

தாகம் தாகமென்றே ஜீவனைத் தந்தார்...-2

அன்பு ஒன்றில்லா உலகத்திலே - நீ

அன்பையே தேடி அலைந்திட வேண்டாம்... - 2

இயேசு ஒருவரே அன்பாய் இருக்கின்றார்

அவரே உன்னை அழைக்கின்றார் அன்பால்... - 2

வா மகளே என்று அணைத்துக்கொள்வரே

வா மகனே என்று அணைத்துக்கொள்வரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு