துதிப் பாடல்கள்

சிலுவை சுமந்த கோலம்

Siluvai Sumandha Kolam

சிலுவை சுமந்த கோலம் - மனித

இதயம் நொறுக்கும் கோலம்

மனதை உருக்கும் கோலம்

என் தேவன் என் நாதன்

என் ஜீவன் என் நேசன்

தாழ்மையின் கோலம் அடிமையின் கோலமாக

புவிமீதில் வந்த தேவன் - 2

என் அன்பர் என் இன்பர்

என் நண்பர் என் சொந்தம் - 2

ஈன சிலுவை சுமந்தார் ஈன பாடுகள் பட்டார்

ஈனப் பாவியை மீட்டார் - 2

புது ஜீவன் புது வாழ்வு

புது நாமம் புது ராஜிய மீந்தார் - 2

கோரப் பாடுகள் பட்டார் கொடிய வாதைகள் அடைந்தார்

கொல்கொதா மேட்டில் மாண்டார் - 2

என் மீட்பர் என் மேய்ப்பர்

என் துணைவர் என் மகிபர்

மரணத்தை வென்ற வீரன் தருணத்தை ஈந்த வீரன்

அலகையைக் கொன்ற வீரன் - 2

என்னுபகாரி என் பரிகாரி

என் தலையாரி என் அதிகாரி - 2

பாதாளம் தனில் இறங்கி வேதாளம் தனைக்கொன்று

உன்னதம் தனில் சென்றார் - 2

சொர்க்கமதில் என்னைச் சேர்க்க

மீண்டும் வருவார் அதி சீக்கிரம் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு