செய்த பாவம் நெருக்குதே என்னை
யார் தேற்றுவார் என்னை
யார் மாற்றுவார் - 2
ஏங்குதே இதயம் ஏங்குதே
தூங்கத் தான்
இமைகள் மறக்குதே - 2
1. பாவம் செய்யும் போது
தெரியல எனக்கு
செய்த பிறகுதானே
தவிக்குது மனசு - 2
2. கண்களின் வழியாய் என்னை
இச்சை இழுத்ததே
இச்சை இழுத்ததால் - நான்
என்னை இழந்தேனே - 2
3. பாவம் செய்யும் போது
இன்பம் எனக்குள்ளே
அதிகம் செய்ததினால்
துன்பம் பெருகுதே - 2
4. பாவம் செய்வதிலே
பிரியமாய் இருந்தேன்
பாவத்தின் சம்பளம் என்ற
மரணத்தை மறந்தேன் - 2
செய்த பாவம் நெருக்குதே இயேசுவே