செங்கடல் ஊடாய் வழி திறந்தவர்
சேதமின்றி உன்னை நடத்திடுவார்-2
கலங்காதே திகையாதே
கரங்களினாலே ஏந்திடுவார்-2
1- கடும் புயல் காற்று வீசிட்டாலும்
கப்பல் தரைதட்டி உடைந்திட்டாலும்-2
பயணங்கள் திசைமாறி போய்விட்டாலும்-2
காக்கும் கரம்கொண்டு ஏந்திடுவார் -சுமந்திடுவார்
2- நம்பினோர் உன்னை கைவிட்டாலும்
அனைத்து வழிகளும் அடைபட்டாலும்-2
அழைத்த உன்தேவன் செயல்படுவார்-2
உனக்காய் புதுவழி திறந்திடுவார்-நடத்திடுவார்
3- சோதனை துன்பம் சூழ்ந்திட்டாலும்
வேதனை வியாதி நெருக்கிட்டாலும்-2
வருத்தம் நீக்கி கண்ணீர் துடைத்து-2
ஆற்றிடுவார் உன்னை தேற்றிடுவார்-சுகம் தருவார்
4- மலைகள் விலகும் குன்றுகள் அகழும்
நேசரின் கிருபை விலகாதென்றார்-2
காக்கும் தெய்வம் இயேசு என்றும்-2
காத்திடுவார் வழி நடத்துடுவார்-செயல்படுவார்