செல்வத்தை நம்பி வாழாதே !
பணத்தை நம்பி போகாதே !
பரலோகத்தை விட்டு விடாதே நண்பா !
நம் பரமன் வழியை மறந்திடாதே ! செல்வத்தை நம்பி
1. செல்வப் பிரியன் செல்வத்தால் அழிவான்
பணப் பிரியன் பணத்தால் அழிவான்
நீயோ இவைகளை வெறுத்து விடு
பரலோக ராஜ்யத்தை நேசித்திடு செல்வத்தை நம்பி
2. பணமே பாதாளம் பாயும் - உன்னை
பாவ வழியில் கொண்டுபோகும்
பண ஆசை தீமைக்கு வேர் - உன்னை
பாசம் இல்லாதவனாய் மாற்றிவிடு செல்வத்தை நம்பி
3. செல்வம் உன்னுடன் வருவதுமில்லை -நீ
செத்த பிறகு உனக்காய் - அழவதுமில்லை
சேர்த்து வைத்த உன் செல்வம் அட அட பிறர் கையில்
செத்தபிறகு உன் வாழ்வு மண்னான இந்த மண்ணில் செல்வத்தை நம்பி