சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
ஜீவிய காலமெல்லாம் செழித்திருப்பாய்-2
தேவனின் அன்பில் மூழ்கித் திளைத்திருப்பாய்
நித்திய மகிழ்ச்சியைச் சுதந்தரிப்பாய்
உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டயிருக்கும்-2
சீயோனில் வாசம் செய்யும் என் ஜனமே-3
உனக்கு பாக்கியமும் நன்பையும் உண்டாயிருக்கும்-2
1-உன் கையின் பிரயாசத்தால்
உன் வாழ்வு செழித்திடுமே
நீ செய்யும் வேலைகளில்
மண்ணும் கூடப் பொன்னாகுமே-2
பிள்ளைகளின் பிள்ளைகளின் வாழ்வைக் காண்பாய்-2
உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்-2
2- ஆவியின் கனிகளினால் உன் மணைவி நிறைந்திருப்பாள்
ஆண்டவரின் கிருபைகளால் உன் பிள்ளைகள் செழித்திருப்பார்-2
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ-2
உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் -2
3- எப்பக்கம் நெருக்கினாலும்
ஒடுங்கி நீயும் போகமாட்டாய்
எதிர்ப்பவர் மத்தியிலே கர்த்தர் உன்னை உயர்த்திடுவார்-2
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ-2
உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் -2
4- நோய் நொடி நீக்கி புது சுகம் பெலனை உனக்களிப்பார்
இரட்சிப்பின் தேவனுக்குள் எப்போதும் மகிழ்ந்திருப்பாய்
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ-2
உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் -2