துதிப் பாடல்கள்

சத்துருவின் கோட்டையை

Sathuruvin Kottaiyai

சத்துருவின் கோட்டையை தகர்த்தெறிய

யூதா முதலில் செல்லட்டுமே

நம் தேசத்தின் நுகத்தை முறித்தெறிய

துதிக்கும் வீரர் எழும்பட்டுமே

யூதாவின் செங்கோல் துதியின் ஆளுகை

நம் தேவனின் இராஜ்ஜியம்

என்றும் துதியின் இராஜ்ஜியம்

யூதாவே நீ எழுந்து துதி

தேவ சமூகம் உன்னோடு தான்

துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய் 2

துதி அபிஷேகம் உன்னோடு தான் - யூதாவின்

யூதாவே நீ சகோதரரால்

புகழப்படுவாய் என்றும்

உன் கரம் உன் சத்துருவின்

பிடரியின் மேலிருக்கும் - யூதாவின்

சமாதானத்தின் தேவனவர்

உன்னை விட்டு நீங்க மாட்டார்

ஜாதிகளும் ஜனங்களுமே

உன்னிடத்தில் சேர்ந்திடுவார் - யூதாவின்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு