சந்தோஷத்துடனே நாமும்
வாழ்ந்து சுகித்திருப்போம் - 2
உயிர்த்தெழுந்தார் நம் இயேசு கிறிஸ்து
மூன்றாம் தினமதிலே - 2
ஆதியும் அந்தமும் இல்லா தேவனாய் - 2
ஆளுகை செய்திடவே - என்றும்
கல்லறை திறந்தது வல்லமையோடு
பூதங்கள் நடு நடுங்க - 2
முத்திரை பொட்ட பத்திரர் மயங்க - 2
நாதன் உயிர்த்தனரே - நம்
உயிர்த்தார் கிறிஸ்து சதாகாலமும் மும் - 2
உயிரோடிருந்திடவே
ஆர்ப்பரிப்புடனே ஆக மகிழ்ந்திடுவோம் - 2
அல்லேலூயா பாடுவோம் - நாம்
நம்சத்துருவாம் சாத்தானின் தலையை
சிலுவையில் உடைத்தவராய் - 2
மரணத்தை ஜெயித்து மகிமை அடைந்தார் - 2
மன்னனை ஸ்தோத்திரிப்போம் நம்
இம்மானுவேல் நாதன் நம்மோடிருக்கவே
உயிர்த்தார் நமக்காக - 2 ஆகையினாலே உயிர்த்தெழுந்திடுவோம் - 2
நாதன் வருகையிலே - நாம்
பரலோகம் சென்றார் பரன் நமக்காய்
பரிந்து வேண்டிக்கொள்ள
பிதாவின் வல பாரிசத்திலே - 2
நாதன் வீற்றிருக்கிறார் - நம் - 2