சந்தோஷத்துடன் ஸ்தோத்திரிப்பேன் அன்பரேசுவை
அதிகமாய் அன்பரேசுவை
பாவிகள் மேல் அன்பு வைத்த பார்த்திபன் இயேசுவை
ஸ்தோத்திரிப்பேன் பார்த்திபன் இயேசுவை -2
1. பாவிகளை மீட்கும் பொருளாய் பாரில் வந்தவரை
ஸ்தோத்திரிப்பேன் பாரில் வந்தவரை -2
பாவி என்னை மீட்டதினால் சந்தோஷம் கொண்டு
ஸ்தோத்திரிப்பேன் சந்தோஷம் கொண்டு -2
2. பாதகர்க்காய்ப் பாரக்குருசில் பாடுபட்டவரை
ஸ்தோத்திரிப்பேன் பாடுபட்டவரை -2
பாவ பாரம் நீங்கி என்னை சொந்தமாக்கியதால்
ஸ்தோத்திரிப்பேன் சொந்தமாக்குதல் -2
3. சந்தோஷமாக ஜீவிக்க கிருபை ஈந்தவரை
ஸ்தோத்திரிப்பேன் கிருபை ஈந்தவரை -2
பரம பாதுகாவலனாய்ப் பாதுகாப்பவரை
ஸ்தோத்திரிப்பேன் பாதுகாப்பவரே -2
4. அன்பர் வருகையை நினைக்கும் போது சந்தோஷம் பொங்குதே
இதயத்தில் சந்தோஷம் பொங்குதே -2
அல்லும் பகலும் ஸ்தோத்திரிப்பேன் சந்தோஷத்துடன்
அன்பரை சந்தோஷத்துடன் -2