சந்தோஷமே மகா சந்தோஷமே - நேசர்
என்னோடிருப்பதால் சந்தோஷமே
சந்தோஷமே மகா சந்தோஷமே
இன்றும் சந்தோஷமே என்றும் சந்தோஷமே
பாவத்தின் ஆழத்தில் இருந்து என்னை பரன்
மீட்டுக் கொண்டதால் சந்தோஷமே
அவர் திரு இரத்தத்தால் என்னைக் கழுவி - நித்திய
மகிமையை ஈந்ததால் சந்தோஷமே
விசுவாசத்தில் யான் பிழைத்திருக்க - அவர்
வரமதை ஈந்ததால் சந்தோஷமே
உலகத்தை ஜெயிக்கும் விசுவாசத்தை ஏழை எனக்கவர் ஈந்ததால் சந்தோஷமே
வருகையின் தொனி காதில் கோட்டிடுதே - நேசர்
வருவார் நிச்சயம் சந்தோஷமே
ஆகாயத்தில் அவரை சந்திக்கவே என்னை
ஆயத்தமாக்கியதால் சந்தோஷமே