துதிப் பாடல்கள்

சாரோனின் ரோஜாவே என் லீலி

Saaronin Rojaavae En Leeli

சாரோனின் ரோஜாவே என் லீலி புஷ்பமே

மருதோன்றிப் பூங்கொத்தே என் மணவாளரே-2

உம் கரம் பிடிக்க காத்திருக்கும் கன்னிகை நானே

என் மனமகிழ்ச்சியாயிருக்கும் நேசர் நீர்தானே-2

கண்ணே மணியே என்று கைகளில் அள்ளிக்கொண்டு

ரூபவதியே என்று சேர்த்தணைத்தாரே

என் எல்லா குறைகளையும் தீர்த்து வைத்தாரே-2

நான் மணவாளன் இயேசுவுக்கு சொந்தமல்லவோ

அவர் எனையாளும் ராஜாதி ராஜனல்லவோ-2

அன்பின் சிறைகளுக்குள் கட்டி இழுத்துக்கொண்டு

உள்ளம் கவர்ந்து எந்தன் கரம் பிடித்தாரே

என்னை உள்ளங்கையில் வரைந்து குரல் கொடுத்தாரே-2

என் பெயர் சொல்லி அழைத்திருக்கும் நேசரல்லவோ

நான் அவர்க்குள்ளே பிழைத்திருக்கும் தாசனல்லவோ-2

கற்புள்ள கன்னிகையாய் ஒப்புக்கொடுக்கப் பட்டேன்

காலம் வரும் வரைக்கும் காத்திருப்பேனே

இயேசு காட்சி கொடுக்கும் வரை பார்த்திருப்பேனே-2

என் இதய சிங்காசனத்தில் இயேசு ராஜாவே

பொன் உதய விடியலைப் போல் வீற்றிருப்பாரே-2

ஆத்தும நேசர் அவர் ஆலய தேவன் அவர்

இயேசு என்னும் இனிய நாமம் உள்ளவர்

என் எல்லா எல்லைகளிலும் நிறைந்திருப்பவர்-2

என்னைப் பரலோகம் கொண்டு செல்லும் வழியானவர்

இந்தப் பரதேசிக்காக அன்று பழியானவர்-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு