துதிப் பாடல்கள்

ராஜாதி ராஜன் இயேசு மேகமீதில்

Raajaadhi Raajan Yesu Megameedhil

ராஜாதி ராஜன் இயேசு மேகமீதில் வந்திடுவார்

அவரோடு நானும் சென்றிடுவேன் . ஓ . . .

காணாத காட்சியெல்லாம் கண்டு அங்கே மகிழ்ந்திடுவேன்

பொன்னான வீதியில் வலம் வருவேன்

என் உன்னதரை , ஓஹோ என் உயர்ந்தவரை ஓஹோ . . .

என் நல்லவரை , ஓஹோ என் வல்லவரை ஓஹோ . . .

அந்த விண்ணொளி தேசத்தில் கண்டு மகிழ்வேன்

கவலைக் கண்ணீர் துன்பம் அங்கே இல்லை

பசியும் , தாகமும் பயமும் அங்கே இல்லை - 2

காலையும் , மாலையும் அங்கில்லை

காரிருள் என்பது துளியும் இல்லை

இரட்சிக்கப்பட்டோர் ஜீவ ஒளியில் அங்கே நடந்திடுவார்கள்

வெண் குருத்தோலை பிடித்தே பவனி வருவேன்

வெள்ளை அங்கி தரித்தே தேவனைத் தொழுவேன் - 2

முள்முடி சூடிய இயேசுவிடம் பொன்முடி சூடி மகிழ்ந்திடுவேன் - 2

ஆட்டுக்குட்டியானவரோடு ஆடிப்பாடி அகமகிழ்வேனே -

ஜீவக்கனியை நாளும் அங்கே புசிப்பேன்

ஜீவ நதியில் நாளும் தாகம் தீர்ப்பேன் - 2

தூதர்கள் பணிவிடை செய்திடுவார்

தூயவர் என்னை அணைத்திடுவார் - 2

ஆண்டாண்டு காலம் அவரின் மடியில்

அமர்ந்தே ஆளுகை செய்வேன் -

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு