ராஜாதி ராஜன் நம் இயேசு
விண்ணை விட்டு மண்ணில் வந்தார் -2
வானமே புகழ்ந்து பாடு
பூமியே குதித்து ஆடு
இருள் நீக்கும் ராஜன் அவர் - உன்னை
வெளிச்சமாய் மாற்ற வந்தார் - 2
பாடு மனமே பாடு
பரிசுத்தரை புகழ்ந்து பாடு
பரலோக தேவன் அவர் - நம்
பாடுகள் மாற்ற வந்தார்
தூதர்கள் போற்றும் தேவன் - சின்ன
தொழுவத்தை தேர்ந்தெடுத்தார்
அகிலமும் ஆளும் கர்த்தர் - நம்
இதயத்தில் வாழ வந்தார்