துதிப் பாடல்கள்

ராஜா ராஜா எங்கள் இயேசு ராஜா

Raajaa Raajaa Engal Yesu Raajaa

ராஜா ராஜா எங்கள் இயேசு ராஜா

உம்மை அன்போடு அழைக்கிறோம் வாரும் ராஜா

ரோஜா ரோஜா சாரோனின் ரோஜா

எங்கள் ராஜாதி ராஜாவே வாரும் ராஜா

வானாதி வானங்களும்

உம்மை கொள்ளக்கூடாதிருக்கும்

கர்த்தாதி கர்த்தத்துவம்

உங்க தோளின் மேலேயிருக்கும்

ஆதியும் அந்தமும் ஆனவரே

ஆரம்பம் முடிவு இல்லாதவரே

முந்தினவர் பிந்தினவர் நீரே

இருந்தவர் இருப்பவர் வருபவரே

மாட்சிமையும் வல்லமையும்

மகிமை ஜெயமும் மகத்துவமும்

ராஜ்யமும் உம்முடையவை

தேவன் எல்லாமே ஆளுகிறீர்

எல்லோர்க்கும் தலைவராய் உயர்ந்தவரே

எல்லாவற்றிற்கும் மேலானவரே

எல்லார் மேலும் தயை உள்ளவரே

எல்லா மகிமைக்கும் பாத்திரரே

மார்பருகே பொற்கச்சையும்

ஏழு பொன் விளக்கின் மத்தியிலும்

நிலையங்கி தரித்தவராய்

ஏழு நட்சத்திரம் ஏந்தினவராய்

தேவ மகிமையின் பிரகாசமே

தெய்வீகத்தன்மையின் சொரூபமே

ஒருவராய் சாவாமையுள்ளவரே

ஒருபோதும் மாறாத மெய்தேவனே

தூயாதி தூயவரே தூய ஆவியும் ஆனவரே

துதி கனம் மகிமைக்கெல்லாம்

என்றும் பாத்திரர் ஆனவரே

காணக்கூடாதவராய் இருப்பவரே

சேரக்கூடா ஒளியில் வசிப்பவரே

சத்துவமும் வல்லமையும் உம் கரத்தில்தான்

நித்தியத்துக்கான வழி உம்மிடத்தில்தான்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு