புது வருடத்திலே உம்மை துதித்திடுவேன்- உம்
சமூகத்தையே தினம் நாடிடுவேன்
கடந்த நாட்களில் செய்த நன்மைகள்
நினைத்து நினைத்து துதித்திடுவேன்
1. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திடுவார் - 2
ஆத்துமாவைத் தேற்றிடுவார்
நீதியின் பாதையில் நடத்திடுவார் - 2
2. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடந்தாலும் நான் பயப்படேனே - 2
தேவரீர் என்னோடிருப்பீர் - உமது
கோலும் தடியும் என்னை தேற்றும் - 2
3.சத்துருக்களுக்கு முன்பாக
பந்தியை நீர் ஆயத்தம் செய்வீர்
என்னை எண்;ணெயால் அபிஷேகிப்பீர்
எந்தனின் பாத்திரம் நிரம்பி வழியும்
4.ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்
கர்த்தருடைய வீட்டினிலே
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்