புது வாழ்வு எனக்கு தந்தார்
புது கிருபைகள் எனக்கு தந்தார்
நான் வாழவே நான் மகிழவே
என் இயேசு இரத்தம் சிந்தினார்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆனந்தமே
போராட்ட நேரங்களில்
ஒரு தாயை போல் தேற்றினார்
பயந்த நாட்களெல்லாம் - மன
ஆறுதல் தந்தாரையா
மரண பள்ளத்தாக்கில் - நாங்கள்
நடந்த வேளைகளில்
உம் வசனம் என்னை தாங்கி
இந்நாள் வரை காத்திட்டதே
கர்த்தர் மேல் நம்பிககை வைத்தேன்
காரியங்கள் வாய்க்க செய்தார்
உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்வேனையா