துதிப் பாடல்கள்

புது கிருபை என்னை சூழ்ந்தது

Pudhu Kirubai Ennai Soozhndhadhu

புது கிருபை என்னை சூழ்ந்தது

புது பெலனும் என்னை தாங்கியது

புது நம்பிக்கை என்னை தேற்றியது

புது வல்லமை எனக்குள் வந்தது

என் ஜீவனின் ஆதிபனாம் இயேசுவே

உம் கரத்தால் தூக்கி என்னை மீட்டிரே

என் புலம்பல் யாவும் ஆனந்தமாய் மாற்றிட

புது உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் தந்தீரே

புது வழிகள் நான் கண்டேனே

புது வாழ்வும் நான் பெற்றேனே

புது நினைவுகள் என்னில் நிறைந்திட

புது தைரியம் எனக்குள் பிறந்ததே

என் சிறையிருப்பை மாற்றின தேவனே

என் ராஜ்ஜியத்தை விஸ்தாரமாக்கினீரே

என் பாவங்கள் பாராது மன்னித்து

புது மனிதனாய் என்னை மாற்றினீரே

புது வார்த்தைகள் எனக்கு தந்தீரே

புது பாஷைகள் பேச செய்தீரே

புது எண்ணெய் என்மேல் பொழிந்து

புது கிரீடம் எனக்கு சூட்டிநீரே

என் சூழ்நிலை அறிகின்ற தேவனே

என் சத்தத்திற்கு உம் செவியை சாய்பீரே

நான் நிர்மூலமாகாமல் காத்ததால்

புது நன்றி பாடல் பாடிடுவேன் என்றுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு