புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள்
வேரின்றி முளைத்த பயிர்கள் நாங்கள் - 2
தாய் தந்தை யாருமில்லையே
பேசாமல் கண்ணீரும் காவியம் பாடுதே - 2
1. உணவும் உடையுமின்றி உறவும் உறக்கமின்றி
உயிர்கள் நாங்கள் வாழ்கிறோம் - 2
உணர்வை புரிந்துகொள்ள யாருமில்லையே - இங்கு
உதவி செய்யும் இதயமில்லையே - 2
2. தாய் பாலை ருசித்ததில்லை,
தகப்பனை கண்டதில்லை - 2
யார் செய்த பாவமோ ஒன்றுமே புரியவில்லை - 2
கைப்பிடித்து விளையாட யாருமில்லையே - இங்கு
கதறி அழ வழியுமில்லையே - 2
3. ஊரும் உலகமும் அனாதையாக்கிடுச்சு..
என் பேரை சொல்லி சிலர் பணமும் வாங்கியாச்சு - 2
தேகமெல்லாம் உருகி போகுதே
எங்கள நேசித்திட யாருமில்லையா? - 2
புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள்
வேரின்றி முளைத்த பயிர்கள் நாங்கள் - 2
எங்கள தேடி இயேசு அப்பா வந்தாங்க..
எங்க கண்ணீர தொடச்சு அள்ளியணச்சாங்க - 2
இந்த அப்பாவ போல யாருமில்லையே..
இயேசு அப்பா மட்டுமே எனக்கு போதுமே - 2
எங்க அப்பாவும் அம்மாவும் எல்லாமும் நீரே
உங்க மார்பிலே... மடியிலே சாய்ந்திருப்பேனே.. - 2
உங்க மார்பிலே... மடியிலே சாய்ந்திருப்பேனே..
நான் சாய்ந்திருப்பேனே.. - 2