பொன்னோ மணியோ தேவையில்லை
இயேசு இருப்பதினால் கவலையில்லை
இது வெறும் வார்த்தையில்லை
வெட்டிப்பேச்சு இல்லை
ருசித்துப்பார்த்தவர்க்குப் புரியும் இது
இயேசுவை ரசித்துப் பார்த்தவர்க்குத் தெரியும் இது-2
ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு (சம்பூர்ணமாகும்)-2
காலங்கள் கடந்து போனாலும்
காத்திருந்தால் (புது பெலனுமாகும்)-2
நாளை தினம் குறித்து கவலையில்லை
நடுத்தெருவில் நிற்கத் தேவையில்லை-2
இது ஆசை வார்த்தையில்லை
ஆள் சேர்க்கவில்லை
அனுபவித்தவரின் சாட்சி இது
இயேசுவை அறிந்து கொண்டவரின் பேச்சு இது-2
பலவீனம் அது வந்த போதும்
தேவ கிருபை பெலன் அது (நமக்கு போதும்;)-2
எதிராளி நம்மைச் சூழ்ந்த போதும்
அவர் நமக்காக செய்யும் (யுத்தம் போதும்)-2
எந்த சூழ்நிலைக்கும் கலக்கமில்லை
இதெல்லாம் நினைக்க துளி நேரமில்லை-2
இனி முறு முறுப்பு இல்லை
புலம்பல் அறிக்கையில்லை
எதுவும் அவர் சுமக்கும் பாரம் இது
எதற்கும் துதி செலுத்தும் நேரம் இது
விருதாவாய் தன்னைத் தேடவேண்டுமென்று
யாருக்கும் (அவர் சொன்னதில்லை)-2
பெரிதான இரட்சிப்புத் தரவேண்டுமென்று
எளிதாக நீதி (பேசும் தெய்வம்)-2
அவரே கர்த்தர் வேறொருவர் இல்லை
அவரைத்தவிர யாரும் தேவன் இல்லை
அவர் வேறு யாரும் இல்லை
வெகு தூரம் இல்லை
உனக்குள் வாசம் செய்யும் ஆவியானவர்
உன்மேல் நேசம் வைத்த இயேசுவானவர்