1. பிறந்தார் இயேசு நமக்காய் இரட்சகராக
பிறந்தார் இயேசு நமக்காய்
நம்மை இரட்சித்திடவே இரட்சகரான தேவன் - 2
பெத்லகேம் ஊரதிலே ஏழைப் பிள்ளையாகவே
2. பரலோகின் மகிமை விட்டு இப்பூவுலகில்
பரலோகின் தேவன் பிறந்தார்
மாட்டுத் தொழுவம் தனில் மனுஷனாய் அவதரித்தார் - 2
மகா மகிமையின் தேவனாம் நம் கர்த்தர்
3. உன்னதத்தின் தேவனுக்கு மகிமையும்,
பூமியில் சமாதானமும்
மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று -2
தேவதூதர் தேவனைத் துதித்துப் பாடினர்
4. மாட்டின் முன்னணைதனிலே கந்தைத்துணிகள்
சுற்றப்பட்டவராக
மாடி வீடுகளுடைய மகா மகிபர் - 2
மந்தை மேய்ப்பர்கள் மகிழ்ந்திடக் காட்சி தந்தார்
5. தம் சிங்காசனத்தையும் கிரீடங்களையும்
ஆளுகையும் துறந்து
நம்மோடிருந்திடவே இம்மானுவேலராக - 2
கிறிஸ்து இயேசு நாதர் இவ் உலகில் பிறந்தார்
6. அதிகாரம் ஐசுவரியம் கனம் உயர்வும்
மகிமை மகத்துவமும்
அழகு சவுந்தரியம் யாவையும் விட்டுவிட்டு - 2
அடிமையாய் அவதரித்தார் நமது அன்பின் தேவன் - பிறந்தார்
7. கிழக்கிலுள்ள சாஸ்திரிகள் விந்தையான
ஓர் நட்சத்திரத்தைக் கண்டு
கிறிஸ்து பிறந்தார் என்று திட்டமாய்த் தாம் அறிந்து - 2
கிறிஸ்துவைப் பணிந்துகொள்ள கால்நடையாய்ச் சென்றனர்
8. சாஸ்திரிகள் சாஷ்டாங்கமாய் விழுந்து பிள்ளையாம்
இயேசுவை தொழுது கொண்டு
பொன்னும் தூபவர்க்கமும் வெள்ளைப்போளம் - 2
மிகப் பணிந்து காணிக்கையாக வைத்து வந்தனர்
9. ராஜாவும் தேவனுமான கிறிஸ்து
பாடுபட்டு மரித்து
அடக்கம் பண்ணப்படுவார் என்று தாம் முன்னறிந்து - 2
பொன் தூபவர்க்கம் வெள்ளைப்போளம் வைத்தனர்
10. சுகம் பெலம் ஆறுதல் சமாதானம்
சந்தோஷம் யாவும் பெற்று
பரிசுத்தத்தோடு நாம் பரலோக பாக்கியம் பெற - 2
நம் பாவ துக்கங்களைத் தாமே சுமக்கப் பிறந்தார்
11. எல்லோரும் எப்போதும் என்றென்றும்
களிகூர்ந்தானந்தித்து
சதாகாலமும் மிக சந்தோஷமாய் வாழவும் - 2
சந்தோஷத்தின் நற்செய்தியோடு தாமே பிறந்தார்