பெத்லகேம் ஊரதிலே மாட்டுத் தொழுவத்திலே
தேவ சுதன் பிறந்தாரே - நம்
தேவனாம் கிறிஸ்து பிறந்தாரே
கர்த்தரும் இரட்சகரும் மீட்பருமான - 2
மகிமையின் தேவன் பிறந்தாரே - 2
மனிதரில் ஒருவரும் கண்டிராதவரும்
காணக்கூடாதவருமான - நம்
தேவாதி தேவன் பிறந்தாரே
தேவ கோபம் போக்கிடவே - 2
தேவ குமாரன் பிறந்தாரே - 2
சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிற
ஒளியாம் இயேசு பிறந்தாரே - மெய்
ஒளியாம் தேவன் இவர்தானே
நம்மைப் பிரகாசிப்பிக்கும் மெய் தேவன் அவரே
நம்மைக் காண்கிற தேவன் இவரே - 2
தாம் ஒருவரே ஞானமுள்ளவர்
தாமே மகா பெரியவர் - நம்
தாழ்வில் நம்மை நினைப்பவர்
தம்மாலே தாமே தம் தயவால் - 2
நம் சாபம் நீக்கப் பிறந்தாரே 2
கவலை கண்ணீர் தீர்க்கக் கர்த்தர் பிறந்தனரே
களிகூர்ந்து மகிழுவோம்
கர்த்தரைப் பாடிப் போற்றிடுவோம்
கர்த்தர் கிருபையால் நிறைந்திடவே - 2
கர்த்தரின் பாதம் பணிந்திடுவோம் - 2
விண்ணின் மகிமையை மண்ணோர்க்களித்திடவே
மண்ணுலகில் அவதரித்த தேவன் - நம்மை
விண்ணுலகில் சேர்க்கவரும் தேவன்
துதி கனம் மகிமை! - 2
ஆமென்! அல்லேலூயா! ஆமென்! - 2