துதிப் பாடல்கள்

பேசுகின்ற அன்பின் தெய்வம்

Pesugindra Anbin Theyvam

பேசுகின்ற அன்பின் தெய்வம் இயேசு - 2

அவர் திரு மொழிகளுக்கு செவி கொடுப்போமே - 2

அவர் அன்பிற்குள்ளே நிலைத்து நாமும் அக மகிழ்வோமே 2

அல்லேலூயா ...4

அல்லேலூயா இயேசுவுக்குள் வாழ்வை கட்டுவோம் - 2

நல்ல பங்கை தெரிந்த கொண்ட மரியாளை போல்

நாமும் இன்று இயேசுவையே தெரிந்து கொள்வோமே

அவரே வாழ்வு அவரே வழியும்

அவரே உண்மையும் அன்புமானவர்

பாரதத்தின் மக்களெல்லாம் மீட்பை காண - நாம்

வாழ்வுதனை இயேசுவுக்கே அர்ப்பணிப்போமே

சத்தியம் சொல்லுவோம் சாட்சியாய் வாழுவோம்

இயேசுவே உலகின் மீட்பர் என்று முழங்குவோம்

அல்லேலூயா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு