பெந்தெ கொஸ்தின் ஜீவியமே பாரில்
பாக்கியம் ஆன ஜீவியமே
பரலோக நாதன் பாரினிலே
அவதரித்ததின் காரணமே - 2
பெந்தெ கொஸ்தின் அனுபவம் - 2
மானிடர் யாவரும் அடைந்திடவே
பெந்தெகொஸ்தே அனுபவம் என்றால்
கருத்தை நன்றாக அறிந்திடுவாய் - 2
ஆன்மீக வாழ்வின் அனுபவம்
ஆவிக்குரிய ஜீவியமாம் - 2
மகிமை அடைந்த ஜீவியமாம் - 2
பரலோகத்திற்கேற்ற ஜீவியமாம்
கிறிஸ்துவின் சரீர வாழ்க்கையிலே
உலகத்தில் இருந்த காலத்திலே - 2
வெளிப்பட்ட ஜீவியம் தானே
பெந்தெகொஸ்தின் அனுபவமே - 2
மானிடர் யாவரும் பெற்றிடவே - 2
மானிலத்தில் அதைக் காண்பித்தாரே
கிறிஸ்து சீடரை அழைத்ததுமே
அனுபவத்தை கற்றுக் கொடுத்திடவே - 2
சீடரைக் கொண்டு நடந்ததுமே
அடிக்கடி போதனை கொடுத்ததுமே
பெந்தெகொஸ்தே அனுபவத்தை - 2
அடைந்திட தகுதிப் பட்டிடவே
கெத்சமனே தோட்டம் முதல்
கல்வாரி மலை தான் வரைக்கும் - 2
அவர் திரு இரத்தம் சிந்தினதின்
நோக்கம் என்ன அறி மானிடனே - 2
பாக்கியமான ஜீவியத்தை - 2
பாரினில் ஸ்தாபித மாக்கிடவே
கிறிஸ்து நொறுக்கப்பட்டது
ஈன சிலுவை சுமந்தது - 2
குருசினில் அடிக்கப்பட்டதுமே
மூன்றாணியில் தொங்கி மரித்ததுமே - 2
மூன்றாம் நாள் உயிரோடெழுந்ததுமே - 2
மானிடர் யாவரும் பெற்றிடவே
வாக்குத்தத்தத்தின் வல்லமையாம்
உன்னதத்தின் பெலனிதுவாம் - 2
காத்திருந்து பெற்றிடவே
கட்டளை கொடுத்தார் சீஷருக்கு - 2
காத்திருந்தார் நூற்றிருபதுபேர் - 2
ஐம்பதாம் நாளதில் அடைந்தனரே
அன்னியபாஷை அடையாளமாம்
சரீர அசைவும் அடையாளமாம் - 2
பரிசுத்த வாழ்க்கைக்கு வல்லமையாம்
பரிசுத்தவான்களின் அதிகாரம் - 2
விசுவாசத்திற்கு ஆரோக்கியம் - 2
சத்தியத்திற்குள் நடந்திடும் ஜீவியமாம்
பாவத்திற்கு மரித்து நீதிக்கு
பிழைத்து ஜீவிக்கும் அனுபவமாம் - 2
பாவம் அற்ற ஜீவியம்
பரிசுத்த வாழ்க்கையின் ஜீவியம் - 2
நற்சாட்சி பெற்றிடும் ஜீவியமாம் - 2
நாதரைக் காண்பிக்கும் ஜீவியமாம்
பரிகாசம் நிந்தை சகித்திடும் ஜீவியம்
உபத்திரவம் பொறுத்திடும் ஜீவியம்! - 2
சத்ருவை சினேகிக்கும் ஜீவியமாம்
பிறர் மேல் அன்பு கூரும் ஜீவியமாம் - 2
ஒரு குளத்தில் அறைந்திடுவோர்க்கு - 2
மறு கன்னத்தைக் காண்பிக்கும் ஜீவியமாம்
யாவரும் அதை பெற்றிடவே
தேவன் அழைக்கிறார் வந்துவிடுங்கள்
விசுவாசத்துடன் வந்திடுங்கள்
கேட்டு அதனைப் பெற்றிடுங்கள் - 2
கேட்கிறேன் பெறுவான் என்றனரே - 2
வாக்கு மாறா வல்லவரே