பயப்படாதே பயப்படாதே
மகிமையின் தேவன் இயேசு நம்முடனே
அற்புதர் அவர் பெரியவர்
பெரும் காரியங்கள் செய்பவர்
... அல்லேலூயா... அல்லேலூயா
வானத்து பறவையை கவனித்து பாருங்கள் - அவை
விதைப்பதும் அறுப்பதும் சேர்ப்பதுமில்லையே
அவைகளை வாழவைக்கும் தேவன் - நம்மை
கண்ணின் மணிபோல் காப்பது நிச்சயமே
கேளுங்கள் அப்போது நிறைவாய் கொடுக்கப்படும் - தினம்
தேடுங்கள் அப்போது கண்டடைவீர்களே
தட்டுங்கள் அப்போது திறக்கப்படும் - எல்லா
ஆசீர்பெறுவோம் இயேசுவின் நாமத்தினால்
கர்ஜிக்கும் சிங்கம்போல் சாத்தான் சூழ்ந்தாலும் - யாரை
விழுங்கலாம் என்று சுற்றி திரிந்தாலும்
கலங்காமல் துணிவுடன் நில்லுவோம் - நம்
கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்திடுவார்