பரிசுத்த இரத்தத்தால்
பாவம் கழுவி தூய்மையாக்கிடுமே
உம் தூய ரத்தத்தினால்
என்னை தூய்மையாக்கிடுமே
கண்கள் தூய்மையாக்கும்
செவிகள் தூய்மையாக்கும்
என் நாவை தூய்மையாக்கும்
என் வாயை தூய்மையாக்கும்
கைகள் தூய்மையாக்கும்
கரத்தின் கிரியைகள் தூய்மையாக்கும்
என் கால்கள் தூய்மையாக்கும்
கால்களின் நடையை தூய்மையாக்கும்
எண்ணங்கள் தூய்மையாக்கும்
நினைவுகள் தூய்மையாக்கும்
என் யோசனை தூய்மையாக்கும்
ஆலோசனை தூய்மையாக்கும்
என் ஆவியில் தூய்மைதாரும்
ஆத்துமாவில் தூய்மை தாரும்
சரீரத்தில் உம் ஆவியால்
என்னை நிரப்பி தூய்மையாக்கும்
உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரைக்கும்
முற்றிலும் என்னையுமே
தாழ்த்தி தருகிறேன்