துதிப் பாடல்கள்

பரமண்டலங்களில் இருக்கிற

Paramandalangalil Irukkira

பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே

உம் நாமம் பரிசுத்த படுவதாக

உம் ராஜ்ஜியம் வருவதாக - 2

பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே

உம் சித்தம் பரலோகத்தில் செய்வது போல்

பூமியிலும் செய்யப்படுவதாக - 2

பரமண்டங்களில் இருக்கிற எங்கள் பிதாவே

எனக்கு வேண்டிய ஆகாரத்தை

எல்லா நாளும் தருவீராக - 2

பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே

கடனாளிகளை நாங்கள் மன்னிப்பது போல்

எங்கள் கடன்களை மன்னிப்பீராக - 2

பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே

சோதனையில் விழவிடாமல் காத்து

தீமையில் என்னை இரட்சிப்பீராக - 2

பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே

ராஜ்ஜியம வல்லமை மகிமை உமக்கே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு