பரமபிதாவே பரமன் இயேசுவே
பரிசுத்த ஆவியே பாடிதுதிக்கின்றோம்
பரவசம் அடைகின்றோம்... - 2
வழியும் நீரே சத்தியமும் நீரே
ஜீவனும் நீரையா
ஒளியும் நீரே உண்மையும் நீரே
உன்னதர் இயேசையா... - 2
பாவத்தின் விலங்கை
சாபத்தின் விலங்கை
தகர்த்தியே மீட்டுக் கொண்டீர்... - 2
பரலோக வாழ்வுக்கு பாத்திரராக
எங்களை மாற்றிவிட்டீர்... - 2
இருளினில் வாழ்ந்தோம்
இன்னலில் தவித்தோம்
ஒளிக்கு எம்மை அழைத்தீர்... - 2
உணர்வுள்ள இருதயம் எமக்கு கொடுத்து
உம்மையே துதிக்க வைத்தீர்... - 2