பரம அழைப்பின் பந்தய பொருளே
அதில் பரலோகம் தான் நிச்சயப் பரிசே-2
தொடர்ந்து ஓடுவேன் இலக்கை நோக்கியே-2
முடிவு பரியந்தம் உண்மை உள்ளவனாய் -2
ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
கேரூபின்கள் சேராபீன்கள் உடையவரே -2
மகா பரிசுத்தத்தில் மகத்துவமானவர் நீரே -2 - பரம
சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் நீரே
அதில் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியும் நீரே -2
நித்திய ராஜ்யத்தில் அரசால்பவர் நீரே
அழிவில்லா ராஜ்ஜியத்தை உடையவரும் நீரே - பரம
எனக்காக நியமித்த ஓட்டத்திலே (பாதையிலே)
ஜெயமுடன் ஓடியே நான் முடித்திடுவேன் -2
அந்தக் கானானாகிய சீயோனை பெற்றுக் கொள்வேன்
அந்த பரலோகமாகிய சீயோனை சுதந்தரிப்பேன் - பரம